Sri Vari Bus Service :-
இந்தப் பதிவின் மூலம் நமது Bus Simulator Indonesia விளையாட்டில் புதிய அறிமுகமான Sri Vari பேருந்தின் Livery-ஐ எவ்வாறு இணைத்து விளையாடுவது மற்றும் அதற்கான வழிமுறைகளையே காண உள்ளோம்.
- Sri Vari Transport எனும் தனியார் நிறுவனத்தின் தினசரிப் பேருந்தானது ஈரோடு மற்றும் பழனிக்கு இடைப்பட்ட வழித்தடங்களில் பயணிக்கிறது.
- TN 56 S 5759 என்ற எண்ணைக் கொண்ட இந்தப் பேருந்தானது பெருந்துறை, சென்னிமலை, காங்கேயம், தாராபுரம், அலங்கியம் போன்ற வழித்தடங்களில் பயணிக்கிறது. இதன் மொத்த பயண தூரம் 120 kms ஆகும்.
- இந்த பேருந்தை அறிமுப்படுத்தியவர்கள் அசோக் லேலாண்டு BS6 AL ஆகும். 2024 வருடத்தின் Model-ஐக் கொண்டது.
- இதைப் போன்று இந்நிறுவனத்தின் பல்வேறு கிளைப்பேருந்துகள் பல இடங்களில் இயங்கி வருகின்றது.
- இந்த Sri Vari பேருந்தை பேருந்து விரும்பிகள் Gangster அழைப்பதும் உண்டு.
- இதன் துவக்க நேரங்கள் ; ஈரோடு- பழனி: 6.45 AM, 1.15 PM மற்றும் பழனி- ஈரோடு : 9.55 AM, 5.30 PM.
How To Download SRI VARI Bus Mod :-
- இதற்குக் கீழே வழங்கப்பட்ட Link-ஐப் பயன்படுத்தி SRI VARI Bus -ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- அந்த Link ன் வழியே உள்நுழைந்ததும் Sharemods என்ற பக்கத்தை அடையும். அதில் சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு CREAT DOWNLOAD LINK என்பதை தேர்வு செய்து Download என்பதை Click செய்தால் நமது Mobile -ல் அதற்கான கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும்.
- இப்பொழுது நமது Mobile -ல் உள்ள ZACHIVER App என்பதில் உள்நுழைந்து Download-->SRI VARI BUS Livery என்பதை Click செய்ததும் அதில் சில பயன்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும். அதில் Extract என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக Password Required என்பதில், கீழே குறிப்பிட்டுள்ள Password ஐப் பதிவு செய்து Ok வை Click செய்ய வேண்டும்.
How To Download NEELA BUS MOD :-
- Dinesh Gaming Channel மூலமாக NEELA BUS MOD ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
(அல்லது )
- கீழே வழங்கப்பட்டுள்ள நமது வீடியோ பதிவில் இதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இப்பொழுது நமது Bus Simulator Game -ற்குள் நுழைந்து அதன் முகப்புப் பக்கத்தில் Management என்ற தலைப்பிற்கு கீழே உள்ள GARAGE என்பதை தேர்வு செய்து அதில் NEELA BUS -ஐத் தேர்வு செய்யவும்.
- அதன் பின் இதற்கு மேலே உள்ள Paint தேர்வை Click செய்து Browse Livery என்பதை தொடர்ந்து File Manager--> Download-->SRI VARI Bus Livery என்ற வழிகளைப் பின்பற்றி தேர்வு செய்து High Resolution என்பதை Tic செய்து Apply வை Click செய்தால் SRI VARI Bus Mod நமது NEELA BUS MOD உடன் இணைக்கப்பட்டுவிடும்.
💝 VARI BUS LIVERY PASSWORD :- DGNEELAVARI
0 கருத்துகள்