- பல புதுப்புது விளையாட்டுக்களை களமிறக்கியிருக்கும் இந்த வருடம் நம்ம adventure விரும்பிகளுக்கான தரமான விளையாட்டாக வந்த விளையாட்டுதான் Indiana Jones.
- ஆனால் இந்த விளையாட்டை Play Station மூலம் விளையாடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பலரால் அந்த விளையாட்டின் அனுபவத்தை உணரமுடியவில்லை. அதை நிவர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த '' Indie jonas -the great tomb raider" எனும் நவீன விளையாட்டு.
- நவம்பர் 30, 2024 அன்று வெளியிடப்பட்ட இந்த விளையாட்டானது தற்பொழுது 10,000 த்திற்கும் அதிகமான பயனர்கள்
- பதிவிறக்கம் செய்ததுடன் அதற்கு 3 நட்சத்திரக் குறியீடுகளும் வழங்கியுள்ளனர்.
விளையாட்டு உருவாக்கத்தின் நோக்கம்;
- Harrison ford நடித்து 1981 ல் வெளிவந்த Indiana Jones (Raiders of The Last Ark) முதல் பாகம் தொடங்கி இறுதியாக 2023 ல் வெளிவந்த Indiana Jones And The Dial of Desting எனும் 5-ம் பாகம் வரை வந்த இந்த திரைப்படத்தின் அனுபவத்தை நேரடியாக உணரும் பொருட்டு இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டின் சிறப்பம்சங்கள்;
- திரைப்படத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டில் விளையாடுபவர் அந்த தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் சாகசக்காரரைப் போலவே தீவை ஆராய்ந்து புதையல்வேட்டையில் ஈடுபடுவது,
- தீவின் மர்மத்தைக் கண்டுபிடிப்பது,
- பாறைகள் மீது ஏறுவது, புதிர்களுக்கு விடையளிப்பது போன்ற பல வரைகலைகளை பயன்படுத்தி விளையாடுவோரை மகிழ்விக்கிறது.
- மேலும் இதில் சூழலுக்கு ஏற்ப உடை மற்றும் தொப்பி மாற்றுவது, எதிராளியைத் தாக்குவது போன்ற பல சிறப்பு தேர்வுகளையும் வழங்குகிறது.
- தானியங்கி கேம்பேட் இணைப்பும் சாத்தியம்.
விளையாட்டுத் தளத்தின் தகவல்கள்;
Version------------0.16
Updated on--------Jan 3, 2025
Download size---- 131 MB
Required OS -----Android 8.0 and up
Offered by---------Sn5O Games
0 கருத்துகள்