இப்படிப்பட்ட இந்த விளையாட்டின் மீதான தாக்கம் தற்பொழுது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகவும் உள்ளது.
இத்தகைய செஷ் விளையாட்டை எந்த ஒரு செலவும் இல்லாமல் சரியான ஒரு இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறவர்களின் மனதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த '' chess .com '' என்ற விளையாட்டுத்தளம்.
Chess.com -Play and Learn ன் அறிமுகம்
- இணையதள பயன்பாட்டின் உதவியோடு விளையாடக்கூடிய இந்த விளையாட்டை, இருந்த இடத்தில் இருந்தே உலகில் உள்ள தலை சிறந்த செஸ் கிராண்ட் மாஷ்டர்ஸ் முதல் விளையாட கற்றுக்கொண்டிருப்போர் வரை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 50M பயனாளர்களின் தேர்வாக உள்ள இந்த விளையாட்டிற்கு 4.6 நட்சத்திர குறியீடு வழங்கியுள்ளனர்.
- CHESS விளையாட்டைக் கற்றுக் கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த தளம் ஒரு நேரடி அனுபவத்தைக் கொடுக்கிறது.
- இந்த விளையாட்டை பதிவிறக்கவோ அல்லது பயன்படுத்தவோ எந்த ஒரு கட்டணமும் தேவையில்லை என்பதால் அனைவரின் நட்புத் தளமாகவும் உள்ளது.
விளையாட்டைப் பற்றிய தகவல்கள்:
- Version---------4.6.41-googleplay
- updated on ----dec 30, 2024
- Required OS--- Android 8.O and up
- Released on----Feb 1,2010
விளையாட்டின் சிறப்பம்சங்கள்:
- இச்செயலியில் புதிதாக விளையாட கற்றுக் கொள்பவர்களுக்கு புரியும் வகையில் படிப்படியான மாதிரி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
- அதன் மூலம் எந்த காயினை எவ்வாறு பயன்படுத்துவது எதிராளியை சுலபமாக கையாள எந்த தேர்வு சரியானது என்ற அனைத்தையும் கற்றுக்கொள்ள முடிகிறது.
- அந்தந்த வயதினருக்கு ஏற்ப அவ்வப்பொழுது விளையாடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான மதிப்பெண்களையும் வழங்குவது கூடதல் சிறப்பு
- இந்தச் செயலி நமக்கு விளையாட்டை கற்றுத்தருவதுடன் பல போட்டிகள் மூலம் நம்மை முலுமையாக தயார்படுத்திக் கொள்ள உதவுகிறது.
- முகம் தெரியாத யாரோ ஒரு மனிதர் முதல் நமது நண்பர்கள் வரை விளையாடும் வாய்ப்பை அளிக்கிறது.
- அதோடு AI மூலம் நமக்கு ஒரு பலமான எதிராளியுடன் மோதும் அனுபவத்தையும் வழங்குகிறது.
- செஸ் விளையாட்டைப் பற்றிய தற்போதைய நடப்பு நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள CHESS TV, Articles போன்ற கூடுதல் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
- இச்செயலியில் அனைத்து முன்னனி செஸ் Grand Masters ம் பங்குபெறுவதால் நமக்கு ஒரு உற்சாகமான அனுபவத்தையும் வழங்குகிறது.
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்;
- அதிகாரப்பூர்வ தரவுத் தளம் அல்லது Play Store மூலம் செயலியினுள் நுழைந்தவுடன் E-mail id , தனித்துவமான பயனர் பெயர், Password வழங்க வேண்டும்
- செஸ் விளையாட்டில் பயனரின் அனுபவத்தை உள்ளிட வேண்டும்.
- பயன்படுத்த இருக்கும் செஸ் போர்டின் வகையை தேர்வு செய்ய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களுடன் இணைந்து விளையாட விரும்பினால் அவர்களுக்கான அழைப்பை இங்கே வழங்கலாம்.
- இப்பொழுது இந்தத் தளத்தில் உங்களுக்கான Account உருவாக்கப்பட்டுவிட்டது
0 கருத்துகள்